/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
1,327 தனி நபர் இல்ல கழிப்பறை பணிகள் இழுபறி
/
1,327 தனி நபர் இல்ல கழிப்பறை பணிகள் இழுபறி
ADDED : ஜன 04, 2026 05:34 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டில் 1,579 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 1,327 கழிப்பறைகள் பணிகள் முடியாமல் இழுபறியாகி வருகின்றன.
கிராமப்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும், கிராமப்புற வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொள்ளவும், மத்திய அரசு பல ஆண்டுகளாகவே நிதி ஒதுக்கி வழங்கி வருகிறது. மத்திய அரசு துாய்மை பாரத இயக்கம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திற்கு பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனி நபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு முடிக்கப்படுகின்றன.
கடந்த 2024- - 25ல், 3,208 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அவை கட்டி முடிக்கப்பட்டன. அதையடுத்து, 2025- - 26ல், 1,579 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 252 கழிப்பறைகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,327 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இன்னும் 3 மாதங்களில் நிதியாண்டு முடியும் நிலையில், பெரும்பாலான கழிப்பறை பணிகள் முடியாமல் இழுபறியாகி வருகின்றன.

