/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணியில் இருந்தபோது உயிரிழந்த துாய்மை பணியாளர்
/
பணியில் இருந்தபோது உயிரிழந்த துாய்மை பணியாளர்
ADDED : ஜன 04, 2026 05:33 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், துாய்மை பணியாளர் வேலை செய்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு, 60; இவர், காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்தின் கீழ் துாய்மை பணியாளாக வேலை செய்து வந்தார்.
ஓரிக்கை பகுதியில் பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன் பணியாற்றுவோர், அவரை அருகில் உள்ள அரசு ஆரம்பர சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். பணியில் இருக்கும்போதே துாய்மை பணியாளர் இறந்தது, சக பணியாளர்களுக்கும், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சேட்டு குடும்பத்திற்கு, இழப்பீடு வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

