/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
13.42 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் மண்டல அளவிலான கருத்தரங்கில் தகவல்
/
13.42 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் மண்டல அளவிலான கருத்தரங்கில் தகவல்
13.42 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் மண்டல அளவிலான கருத்தரங்கில் தகவல்
13.42 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் மண்டல அளவிலான கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜன 28, 2025 11:38 PM

காஞ்சிபுரம்:தமிழக நீர்வளத் துறையின் சென்னை மண்டலத்திற்கான கருத்தரங்கம், காஞ்சிபுரம் தனியார் அரங்கில், அரசு கூடுதல் தலைமை செயலர், திட்ட இயக்குநர் தென்காசி ஜவகர் மற்றும் கலெக்டர் கலைச்செல்வி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இக்கருத்தரங்கம், முதல் நாளான நேற்றும், இரண்டாம் நாளாக இன்றும் நடைபெறுகிறது. இதில் பாலாறு, மேல்பாலாறு, பெண்ணையாறு மற்றும் வெள்ளாறு வடிநில வட்டங்களை கொண்டுள்ள காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, திருப்பத்துார் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்திலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள், மகளிர் திட்ட உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில், உலக வங்கி நிதி உதவியுடன், தமிழக பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் பற்றி விவசாயிகளிடம் விளக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்த தமிழக அரசின் ஏழு துறைகளும், தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைகளும் இணைந்துள்ளன.
இத்திட்டத்தால், தற்போது வரை 13.42 லட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெற்று, 14.4 லட்சம் விவசாயிகளின் வருமானத்தை 25 - 100 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், சிறப்பு தலைமை பொறியாளர் நாகராஜன், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், காஞ்சிபுரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் நீர்வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

