/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
/
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
ADDED : ஏப் 15, 2025 06:29 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஓங்கூர் கிராமத்தில் ஆர்.சி., தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. அப்பகுதியை சேர்ந்த 39 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் 16 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆகியோர் சத்துணவு அமைப்பாளர் பாக்கியலட்சுமி, சமையலர் மேரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.