/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் சுற்றித்திரிந்த 17 மாடுகள் பறிமுதல்
/
சாலையில் சுற்றித்திரிந்த 17 மாடுகள் பறிமுதல்
ADDED : நவ 19, 2025 04:46 AM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே கோவூர் ஊராட்சியில் உள்ள சாலைகளில், பொதுமக் கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித் திரிகின் றன.
அவற்றை பிடித்து, மாடுகளை பாதுகாக்கும் கோ சாலையில் ஒப்படைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவையடுத்து, கோவூர் ஊராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த 17 மா டுகள், நேற்று பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
கோவூர் ஊராட்சியில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாடுகளை வளர்ப்போர், அவற்றை சாலையில் திரிய விட்டால், அவற்றை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவூர் ஊராட்சி தலைவர் சுதாகர் தெரிவித்தார்.

