ADDED : நவ 19, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில், குட்கா, ஹான்ஸ், கூல் லிப் ஆகிய போதை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக, மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்தனர்.
அப்போது, குட்கா, கூல் லிப், ஹான்ஸ் என, 62 கிலோ எடை கொண்ட, 43,570 ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடையை நடத்தி வந்த, மணிகுமார், 50, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

