/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மீது பஸ் மோதி விபத்து 18 பேர் படுகாயம்
/
லாரி மீது பஸ் மோதி விபத்து 18 பேர் படுகாயம்
ADDED : அக் 17, 2025 02:36 AM

காஞ்சிபுரம்: பொன்னியம்மன் பட்டரை பகுதியில், லாரி மீது அரசு பேருந்து மோதியதில், 18 பேர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, நேற்று காலை புறப்பட்ட அரசு பேருந்து, தாமல் வழியாக, ஆந்திர மாநிலம் சித்துார் நோக்கி சென்று கொண்டிருந்தது.
மதியம் 2:00 மணிக்கு, பொன்னியம்மன் பட்டரை அருகே, முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், லாரியின் பின்புறம், அரசு பேருந்து மோதியது.
இதில், பேருந்தின் முன்பக்கம் உருக்குலைந்தது. பேருந்தில் இருந்த ஓட்டுநர் உட்பட 10 ஆண்கள், எட்டு பெண்கள் என, 18 பேர் காயமடைந்தனர்.
பாலுசெட்டிச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந் தோரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருகின்றனர்.