/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
லாரி மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி
/
லாரி மீது பைக் மோதல் மாணவர்கள் இருவர் பலி
ADDED : அக் 17, 2025 02:35 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, 'யு- -- டர்ன்' எடுத்த, 'எய்ச்சர்' லாரி மீது பைக் மோதியதில், கல்லுாரி மாணவர்கள் இருவர் பலியாகினர்.
காஞ்சிபுரம் பி.எஸ்.கே., தெருவைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ், 20, தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம், 19. இருவரும், பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், இ.சி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.
நேற்று மாலை, இருவரும் கல்லுாரி முடிந்து, யமஹா எப்.இஷட்' பைக்கில் காஞ்சிபுரம் புறப்பட்டனர். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் ஐ.டி.ஐ., அருகே வந்த போது, வாலாஜாபாதில் இருந்து வந்த, 'எய்ச்சர்' லாரி, 'யு -- டர்ன்' எடுக்க முற்பட்டது.
அப்போது, அதிவேகமாக வந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து, 'எய்ச்சர்' லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த கல்லுாரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஒரகடம் போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.