/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையை ஆக்கிரமித்து 'பார்க்கிங்' உத்திரமேரூரில் தினமும் நெரிசல்
/
சாலையை ஆக்கிரமித்து 'பார்க்கிங்' உத்திரமேரூரில் தினமும் நெரிசல்
சாலையை ஆக்கிரமித்து 'பார்க்கிங்' உத்திரமேரூரில் தினமும் நெரிசல்
சாலையை ஆக்கிரமித்து 'பார்க்கிங்' உத்திரமேரூரில் தினமும் நெரிசல்
ADDED : அக் 16, 2025 10:52 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பிரதான சாலைகளில், இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூரில், பஜார் வீதி, காஞ்சிபுரம் சாலை, எல்.எண்டத்துார் சாலை, மானாம்பதி சாலை, புக்கத்துறை சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.
இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், உத்திரமேரூருக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
அதேபோல, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், மறைமலை நகர், செய்யாறு சிப்காட்டுக்கு செல்லும் தொழிற்சாலை வாகனங்களும் இச்சாலை வழியாக செல்கின்றன. இந்நிலையில், உத்திரமேரூர் பிரதான சாலைகளில் தாலுகா அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், பேருந்து நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு வரும் மக்கள் தங்களுடைய இருசக்கர வாகனங்களை, சாலையிலே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், சாலையில் இட நெருக்கடி ஏற்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறித்த நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல், அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே, உத்திரமேரூரில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வோர் மீது, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.