/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
/
கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
ADDED : அக் 16, 2025 10:51 PM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை சார்பில், 'மெட் நெக்ஸ்ட் - 2025' என்ற 'செயற்கை நுண்ணறிவு, உருவப்பதிப்பு சாதனங்கள் மற்றும் நோயறிதல் வாயிலாக உடல்நலப் பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கரு த்தரங்கம் நடந்தது.
கல்லூரியின் முதல்வர் கணேஷ் வைத்தியநாதன் கருத்தரங்கை துவங்கி வைத்தார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் துறையின் தலைவர் குமரதரன், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், சென்னை ஆர்த்தோ நிறுவனர் ஆறுமுகம், துல்லிய அறுவை சிகிச்சையில் இயந்திரவியலின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.
ஆறு முக்கிய தொழில்நுட்ப அமர்வுகள், 40 கட்டுரை விளக்கக் காட்சிகள் மற்றும் ஆறு இணையான தொழில்நுட்ப தடங்கள் இடம் பெற்றன.
இதில், கல்வி, தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 90 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
உடல்நலம், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப களங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த நோயறிதல்கள், படமாக்கல் தொழில்நுட்பங்கள், உயிரி மருத்துவ சாதனங்கள் மற்றும் பல்துறை உடல்நலப் பராமரிப்பின் கண்டுபிடிப்புகள் போன்ற அதிநவீன பகுதிகள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவு விழாவில், சென்னை போதை ஒழிப்பு மைய தலைமை ஒருங்கிணைப்பாளர் மோகன் நரசிம்மன் உரையாற்றினார்.