/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி பென்னலுாரில் ரூ.1.15 கோடி வீண்
/
பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி பென்னலுாரில் ரூ.1.15 கோடி வீண்
பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி பென்னலுாரில் ரூ.1.15 கோடி வீண்
பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டி பென்னலுாரில் ரூ.1.15 கோடி வீண்
ADDED : அக் 16, 2025 10:50 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பென்னலுார் ஊராட்சியில், தனியார் நிறுவனம் வாயிலாக 1.15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நான்கு மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றார்போல, குடிநீர் வசதி இல்லாததால், குடிநீர் தட்டுபாடு நிலவி வந்தது.
இதனால், புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஹூண்டாய் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், பென்னலுார் ஊராட்சியில் 1.15 கோடி ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, மூன்று போர்வெல், 7 கி.மீ., குழாய் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதையடுத்து, நான்கு மாதங்களாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே, கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.