/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்
/
காஞ்சியில் புதிதாக 19 ஓட்டுச்சாவடிகள்
ADDED : மார் 17, 2024 02:29 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், லோக்சபா தேர்தல் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம், 1,500க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து புதிய ஓட்டுச்சாவடிகளை உருவாக்க வேண்டும் என, கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, தேர்தலுக்கு முன்னதாக, புதிய ஓட்டுச்சாவடிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், ஓட்டுச்சாவடி பிரிப்பது, வசதிகள் குறித்து பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு, புதிதாக 19 ஓட்டுச்சாவடிகளை உருவாக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அலுவலரும், காஞ்சிபுரம் கலெக்டருமான கலைச்செல்வி கருத்து அனுப்பி உள்ளார்.
ஏற்கனவே, மாவட்டம் முழுதும், 1,398 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதன் வாயிலாக, 1,417ஆக ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை உயருகிறது.

