/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகள் கைது
/
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகள் கைது
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகள் கைது
ரூ.4,000 லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகள் கைது
ADDED : நவ 30, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகேயுள்ள மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர், 28. இவர், புதிய வீடு கட்டும் பணியை துவக்கியுள்ளார். இதற்காக மின் இணைப்பு பெற, தாமல் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தை நாடியுள்ளார்.
மின் இணைப்பு பெற, கடந்த 26ம் தேதி, 1,550 ரூபாய், 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தியுள்ளார். அப்போது, உதவி பொறியாளர் அசோக்ராஜ், கட்டண விகிதம் மாற்றம் செய்ய, 'ஆன்லைனில்' 160 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், லஞ்சமாக 4,000 ரூபாய் தர வேண்டும் எனவும், கூறியுள்ளார்,
லஞ்சம் தர விரும்பாத பிரபாகர், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 4,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை அசோக்ராஜிடம், நேற்று மதியம் பிரபாகர் கொடுத்தார்.
அவர், உடனிருந்த ஒயர்மேன் சாந்தமூர்த்தியிடம் பணத்தை வழங்கும்படி கூறியுள்ளார். சாந்தமூர்த்தி பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சாந்தமூர்த்தி, அசோக்ராஜை ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
டி.எஸ்.பி.,கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா உள்ளிட்டோர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.