/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண் பரிசோதனை முகாம் 200 பேர் பங்கேற்பு
/
கண் பரிசோதனை முகாம் 200 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 17, 2025 12:08 AM

உத்திரமேரூர்
மருத்துவன்பாடி கிராமத்தில் நேற்று நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 200 பேர் பங்கேற்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி கிராமத்தில், மாவட்ட பார்வை யிழப்பு தடுப்பு சங்கம், ஹாண்ட் இன் ஹாண்ட் இந்தியா மற்றும் சர்வம் பைனான்சியல் டிரஸ்ட் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
மருத்துவன்பாடி ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் ஆனந்தலட்சுமி, ஹாண்ட் இன் ஹாண்ட் திட்ட மேலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
முகாமில், கண் பரிசோதனை, கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல் ஆகியவற்றுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமில், 200 பேர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.