/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
/
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
ADDED : நவ 28, 2025 04:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவல் சரகத்தில் உள்ள 21 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., தேவராணி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் காவல் துறை சரகத்தில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என, மூன்று மாவட்டங்கள் உள்ளன.
இந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், நிர்வாக காரணங்களாலும், தேர்தல் காரணங்களாலும் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், மூன்று மாவட்டங்களில் பணியாற்றும் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, சரக டி.ஐ.ஜி., தேவராணி, உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாற்றம் செய்வதோடு, காத்திருப்பு பட்டியலில் இருந்த 11 பேருக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒரே காவல் நிலையத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றியோர், சொந்த தொகுதியில் உள்ளவர்கள் என, பல்வேறு காரணங்களால் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

