/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படப்பை சாலையில் 8 இடங்களில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
/
படப்பை சாலையில் 8 இடங்களில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
படப்பை சாலையில் 8 இடங்களில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
படப்பை சாலையில் 8 இடங்களில் முறிந்து விழும் நிலையில் மின்கம்பங்கள்
ADDED : நவ 28, 2025 04:45 AM

படப்பை: படப்பை - ஒரத்துார் சாலையில் எட்டு இடங்களில் மின்கம்பங்கள் சேதமாகி முறிந்து விழும் நிலையில் உள்ளதால் அந்த வழியே செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் இருந்து, ஒரத்துார் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே காவனுார், மாடம்பாக்கம், நாட்டரசன்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படப்பை சாலையில் 11 கே.வி., திறன் கொண்ட மின் ஒயர்களை தாங்கிப் பிடிக்க 25க்கும் மேற்பட்ட கான்கிரீட் கம்பங்கள் உள்ளன.
இதில் எட்டு இடங்களில் மின் கம்பங்கள் பழுதடைந்து சேதமாகி முறிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும், இந்த சாலையில் பல இடங்களில் தாழ்வாக மின் கம்பிகள் செல்கின்றன. இதனால், கனரக வாகனங்கள் செல்லும் போது மின் ஒயரில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், மக்கள் இந்த வழியே அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சேதமான மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.