/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., உட்கட்சி பூசல் ஒன்றிய செயலருக்கு எதிராக ஆவேசம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., உட்கட்சி பூசல் ஒன்றிய செயலருக்கு எதிராக ஆவேசம்
ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., உட்கட்சி பூசல் ஒன்றிய செயலருக்கு எதிராக ஆவேசம்
ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., உட்கட்சி பூசல் ஒன்றிய செயலருக்கு எதிராக ஆவேசம்
ADDED : நவ 28, 2025 04:45 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த, உதயநிதி பிறந்த நாள் விழாவில், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் கோபால் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளுக்கு இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டதால், ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., உட்கட்சி பூசல் பூதாகரமாகியது.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, தி.மு.க., சார்பில், ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலையில் உள்ள, அண்ணா சிலை அருகே, தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
இதில், ஸ்ரீபெரும்புதுார் தெற்கு ஒன்றிய செயலர் கோபால், வடக்கு ஒன்றிய செயலரும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவரும் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்று, அண்ணா உருவ சிலைக்கு மாலை அணிவித்து, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
முன்னதாக, அங்கிருந்த ஒன்றிய கழக நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் சிலர், தெற்கு ஒன்றிய செயலர் கோபாலிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தி.மு.க., நிர்வாகி சுதாகர் ஆகியோரை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியினை, முறையாக பார்க்கவில்லை என கூறி, ஒருமையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க., நிர்வாகிகள், மனோஜ் மற்றும் சுதாகர், ஒன்றிய செயலர் கோபாலிடம் சரமாரியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொது வெளியில் அநாகரிக வார்த்தைகளில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.
தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் கோபால் மீது, ஏற்கனவே தி.மு.க., நிர்வாகிகள் பல குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது, சொந்த கட்சி நிர்வாகிகளையே பொது வெளியில் தரக் குறைவாக பேசியது, பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

