/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்'
/
தமிழ் திறனறி தேர்வில் 231 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 11, 2025 08:14 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 231 மாணவ - மாணவியர், தமிழ் திறனறி தேர்வு எழுத வரவில்லை என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 50 அரசு உயர்நிலைப்பள்ளி, 51 மேல்நிலைப்பள்ளி, 20 அரசு உதவி பெறும் பள்ளிகள் என, மொத்தம் 121 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், 40,000 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியருக்கு நேற்று, தமிழ் திறனறி தேர்வு, தமிழகம் முழுதும் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 தேர்வு மையங்களில், 4,910 பேர் திறனறி தேர்வு எழுத ஒதுக்கீடு செய்தனர்.
இதில், 4,679 மாணவ - மாணவியர் தமிழ் திறனறி தேர்வு எழுதினர். மீதம், 231 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இவர்களுக்கு, மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை கிடைக்காது என, கல்வித் துறையினர் தெரிவித்தனர்.