/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு
/
எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு
எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு
எல்.எண்டத்துார் மடுவு கரையில் 10,000 பனை விதைகள் நடவு
ADDED : அக் 11, 2025 08:14 PM
உத்திரமேரூர்:எல்.எண்டத்துார் மடுவு கரையோரத்தில், 10,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
உத்திரமேரூர் அடுத்த, எல்.எண்டத்துார் கிராமத்தில் உள்ள டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும், சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 80,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, எல்.எண்டத்துார் மடுவு கரையோரத்தில் 10,000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
எல்.எண்டத்துார் ஊராட்சி தலைவர் யமுனா பங்கேற்று, பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
இதில், ஊராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, நற்பணி மன்ற நிர்வாகிகள் செல்வம், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.