/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரும்பு கேட் விழுந்து ஊழியர் படுகாயம்
/
இரும்பு கேட் விழுந்து ஊழியர் படுகாயம்
ADDED : அக் 11, 2025 12:21 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியார் தொழிற்சாலையில் ராட்சத இரும்பு கேட் சரிந்து விழுந்து, படுகாயம் அடைந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வெங்காடு கிராமத்தில் உள்ள கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று மாலை பணிப்புரிந்த சர்வேஷ் சாகோ, 35, தொழிற்சாலையில் இருந்து வெளியே வரும் போது, நுழைவாயிலில் இருந்த இரும்பு கேட் ஊழியர் மீது சரிந்து விழுந்தது.
இதில், முதுகு தண்டில் பலத்த காயமடைந்தவரை மீட்ட, சக ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.