/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 8 மாதங்களில் 26 ரவுடிகள் குண்டாசில் கைது
/
காஞ்சியில் 8 மாதங்களில் 26 ரவுடிகள் குண்டாசில் கைது
காஞ்சியில் 8 மாதங்களில் 26 ரவுடிகள் குண்டாசில் கைது
காஞ்சியில் 8 மாதங்களில் 26 ரவுடிகள் குண்டாசில் கைது
ADDED : ஆக 13, 2025 01:49 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 8 மாதங்களில், 26 ரவுடிகள் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், படப்பை ஆகிய பகுதிகள் ரவுடிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. ரவுடிகள் இந்த இடங்களில் அதிகளவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
சமீப ஆண்டுகளில், ரவுடிகளின் அட்டகாசம் ஓரளவு குறைக்கப்பட்டு, போலீசாரால் கட்டுப் படுத்தும் பணிகள் நடக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக, ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்து, அவர்களை ஒராண்டு வரை சிறையிலேயே இருக்க செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இருப்பினும், சில ரவுடிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து, சில மாதங்களில் வெளியே வருவதும் உண்டு.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்தாண்டு, ஆகஸ்ட் மாதம் வரையிலான கணக்கெடுப்பில், 26 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதை பொருள் விற்பவர்கள், கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் என தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதாரணமாக, பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகு, செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த ஆதி உள்ளிட்ட ரவுடிகள் இந்தாண்டு குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.