/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் 2,622 மதுவிலக்கு குற்றங்கள் பதிவு 1,551 பேருக்கு சிறை; 1,439 வங்கி கணக்கு முடக்கம்
/
காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் 2,622 மதுவிலக்கு குற்றங்கள் பதிவு 1,551 பேருக்கு சிறை; 1,439 வங்கி கணக்கு முடக்கம்
காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் 2,622 மதுவிலக்கு குற்றங்கள் பதிவு 1,551 பேருக்கு சிறை; 1,439 வங்கி கணக்கு முடக்கம்
காஞ்சி, செங்கை, திருவள்ளூரில் 2,622 மதுவிலக்கு குற்றங்கள் பதிவு 1,551 பேருக்கு சிறை; 1,439 வங்கி கணக்கு முடக்கம்
ADDED : ஆக 20, 2025 01:49 AM

காஞ்சிபுரம்:காவல் துறையின் வடக்கு மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 2,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில், 1,551 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கடும் நடவடிக்கை தொடரும் என, போலீஸ் ஐ.ஜி.,அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சாராய ஊறல், சாராயம் விற்பனை செய்வது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகளவில் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து, கடந்தாண்டு 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி காரணமாக, மதுவிலக்கு தொடர்பான நடவடிக்கைகளை, போலீசார் தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
காவல் துறையின் வடக்கு மாவட்டங்களான, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், வேலுார், கடலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களிலும், கடந்த ஜூலை முதல், நடப்பாண்டு ஜூலை மாதம் வரை, ஓராண்டில் போலீசார் எடுத்த நடவடிக்கைகளை, வடக்கு மண்டல ஐ.ஜி.,அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த 10 மாவட்டங்களிலும், ஓராண்டில், 3,821 பேரிடம், மதுவிலக்கு தொடர்பான சட்டவிரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என, போலீசார் எழுதி வாங்கி உள்ளனர்.
இந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 591 பேர், பிணை நன்னடத்தை பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்.
சட்டவிரோத மது விற்பனை, சாராயம் காய்ச்சுதல், உள்ளிட்ட மதுவிலக்கு தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக, ஓராண்டில், 10 மாவட்டங்களில், 14,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,000 லிட்டர் கள்ளச்சாராயம், 67,748 லிட்டர் சாராய ஊறல், 256 எரிசாராயம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளது.
இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 2,622 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 1,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர், பண பரிவர்த்தனைகள் வங்கி கணக்கு வாயிலாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அவர்களின் வங்கிகணக்குகளையும் போலீசார் முடக்குகின்றனர்.
அந்த வகையில், 10 மாவட்டங்களிலும் சேர்த்து, 5,870 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 1,439 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரின் அசையும், அசையா சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். - அஸ்ரா கார்க், வடக்கு மண்டல ஐ.ஜி., காவல் துறை.