/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உதவித்தொகை உயர்வு கோரி போராட்டம் மாற்றுத்திறனாளிகள் 267 பேர் கைது
/
உதவித்தொகை உயர்வு கோரி போராட்டம் மாற்றுத்திறனாளிகள் 267 பேர் கைது
உதவித்தொகை உயர்வு கோரி போராட்டம் மாற்றுத்திறனாளிகள் 267 பேர் கைது
உதவித்தொகை உயர்வு கோரி போராட்டம் மாற்றுத்திறனாளிகள் 267 பேர் கைது
ADDED : நவ 11, 2025 11:21 PM

காஞ்சிபுரம்: மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்ககோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற, மாற்றுத்திறனாளிகள், 267 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாதாந்திர உதவித்தொகை, 1,500, 2,000 ரூபாய் என இரு வகையாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
'புதுச்சேரியில் 4,800 ரூபாய்; ஆந்திராவில் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப் படுகிறது.
அதுபோல், தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்' என, மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.
பின், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற, மாற்றுத் திறனாளிகள் 267 பேரையும் போலீசார் கைது செய்தனர்.