/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தொட்டிக்கு செல்லும் உடைந்த குழாய் சீரமைப்பு
/
குடிநீர் தொட்டிக்கு செல்லும் உடைந்த குழாய் சீரமைப்பு
குடிநீர் தொட்டிக்கு செல்லும் உடைந்த குழாய் சீரமைப்பு
குடிநீர் தொட்டிக்கு செல்லும் உடைந்த குழாய் சீரமைப்பு
ADDED : நவ 11, 2025 11:22 PM

ஸ்ரீபெரும்புதுார்: கொளத்துார் ஊராட்சி அலுவலகத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கிய தண்ணீரால் பள்ளி மாணவ - மாணவியர் அவதி அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, கொளத்துார் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு தொடக்கப் பள்ளியில் 43 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி அருகே உள்ள ஊராட்சி அலுவலகம் கட்டடத்தின் மீது வைக்கப் பட்டுள்ள குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில், நேற்று இரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால், பள்ளி வளாகம் மற்றும் பள்ளி சமையல் அறை முன் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியர், வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து சென்றனர்.
இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர்.

