/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கார் மோதி சாலை மைய தடுப்பு சேதம் மணிமங்கலத்தில் விபத்து அபாயம்
/
கார் மோதி சாலை மைய தடுப்பு சேதம் மணிமங்கலத்தில் விபத்து அபாயம்
கார் மோதி சாலை மைய தடுப்பு சேதம் மணிமங்கலத்தில் விபத்து அபாயம்
கார் மோதி சாலை மைய தடுப்பு சேதம் மணிமங்கலத்தில் விபத்து அபாயம்
ADDED : நவ 11, 2025 11:22 PM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையின் மையத் தடுப்பில், கார் மோதி சேதமடைந்துள்ள பாதுகாப்பு இரும்பு வேலியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையை ஒட்டி இருப்பதால், ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், வாகனங்களில் இருந்து வெளியேறும் கரும்புகை, மண் துகள் அடங்கிய துாசிகளால் ஏற்படும் பாதிப்பினை குறைக்க, மையத் தடுப்பில் உள்ள அரளி செடிகளை பாதுகாக்க, இரும்பு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 9ம் தேதி, மணிமங்கலத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஸ்ரீபெரும்புதுார் அருகே, நாவலுாரில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத் தடுப்பில் மோதியது.
இதில், மையத் தடுப்பில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலி நொறுங்கியது. போக்குவரத்திற்கு இடையூறாக சாலை நடுவே விழுந்துள்ள இரும்பு பாதுகாப்பு வேலியினால், அவ்வழியாக செல்லும் வானக ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சாலை மையத் தடுப்பு பாதுகாப்பு இரும்பு வேலியினை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

