/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு ரூ.2.8 கோடியில் திருமண மண்டபம்
/
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு ரூ.2.8 கோடியில் திருமண மண்டபம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு ரூ.2.8 கோடியில் திருமண மண்டபம்
வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு ரூ.2.8 கோடியில் திருமண மண்டபம்
ADDED : மார் 14, 2024 11:43 PM
காஞ்சிபுரம்,:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்குட்பட்ட வல்லக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலுக்கு விசேஷ நாட்கள் மட்டுமல்லாமல், அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான, விடுதி, திருமண மண்டபம் ஆகிய வசதிகள் இல்லாததால், பக்தர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கடந்தாண்டு சட்டசபை அறிவிப்புகளில், வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் தங்கும் விடுதியும், திருமண மண்டபமும் கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
ஒராண்டு கழித்து, 2 கோடி ரூபாய் செலவில், பக்தர்கள் தங்கும் விடுதிக்கான கட்டுமான பணிகள் ஐந்து நாட்கள் முன்னதாக துவங்கின.
இதையடுத்து, புதிய திருமண மண்டபம் கட்ட, 2.8 கோடி ரூபாய் ஹிந்து சமய அறநிலையத் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.
கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அனைத்து வசதிகளுடன்கூடிய திருமண மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

