/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாத்தணஞ்சேரி முகாமில் 282 பேருக்கு பரிசோதனை
/
சாத்தணஞ்சேரி முகாமில் 282 பேருக்கு பரிசோதனை
ADDED : மார் 18, 2024 03:16 AM
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரியில் அப்பகுதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒரகடம் பகுதி சார்தக் நல அறக்கட்டளை சார்பில், பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
அப்பகுதி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று, பொது மக்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
ரத்தம் சம்பந்தமான பரிசோதனை, இ.சி.ஜி., பரிசோதனை, இதயத் துடிப்பலை அளவீடு, எலும்பு கனிம அடர்த்தி மற்றும் குழந்தைகள் பிரிவு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பல், கண் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் 282 பேர் பங்கேற்று, 12 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

