/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்
/
3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்
3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்
3 சத்துணவு மையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கல்
ADDED : மார் 05, 2024 04:08 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வள்ளுவப்பாக்கம் துவக்கப் பள்ளி. குன்றத்துார் ஒன்றியம், குன்றத்துார் துவக்கப் பள்ளி, அய்யப்பன்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களில், காஸ், மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், வெப்பக்காற்று வெளியில் செல்லும் வகையில், மின் விசிறி ஆகிய வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
மேற்கண்ட சத்துணவு மையங்களுக்கு, ஐந்து நட்சத்திர குறியீட்டுடன் கூடிய தரச்சான்றிதழ்களை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
சத்துணவு பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.