/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கத்தில் ரூ.3 லட்சம் மதுபாட்டில் திருட்டு
/
சாலவாக்கத்தில் ரூ.3 லட்சம் மதுபாட்டில் திருட்டு
ADDED : மார் 01, 2024 11:00 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் உள்ள ராஜகுளம் அருகே டாஸ்மாக் கடை இயங்குகிறது. நேற்று முன்தினம் இரவு கடையில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
நேற்று பகல் 12:00 மணிக்கு விற்பனையாளர் கடையை திறந்த போது, சுவரில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் பின்பக்கம் உள்ள இரும்பு கதவின் பூட்டை உடைத்து, அதற்குள் சென்று கடைக்கான சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து மது பாட்டில்கள் திருடியது தெரிய வந்தது.
டாஸ்மாக் கடையில் 40 பெட்டிகளில் இருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் 30,000 ரூபாய் திருடு போனது.
இதுகுறித்து டாஸ்மாக் கடை மேலாளர் தயாளன் அளித்த புகாரின் படி, காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கடையை சுற்றிலும் ஆய்வு செய்யப்பட்டது.
சாலவாக்கம்- - எடமச்சி சாலையில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

