/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 கொள்முதல் நிலையங்கள் வாலாஜாபாதில் திறப்பு
/
3 கொள்முதல் நிலையங்கள் வாலாஜாபாதில் திறப்பு
ADDED : மார் 27, 2025 12:49 AM

வாலாஜாபாத், :வாலாஜாபாத் ஒன்றியத்தில், ஏரி, கிணறு மற்றும் பாலாற்று பாசனம் வாயிலாக விவசாயிகள், நெல், வேர்க்கடலை, தோட்டப் பயிர்கள் போன்றவை ஆண்டுதோறும் சாகுபடி செய்கின்றனர்.
பருவ மழையை தொடர்ந்து, சம்பா பருவத்திற்கு கடந்த டிசம்பரில் நடவு செய்த நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாலாஜாபாத் ஒன்றியத்தின் பல பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளன.
அதன் ஒரு பகுதியாக, பூசிவாக்கம், நெய்க்குப்பம், அயிமிச்சேரி ஆகிய கிராமங்களில், நேற்று முன்தினம் நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர், ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.