/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 டன் செங்கரும்பில் காளை, மாட்டு வண்டி பா.ஜ., நிர்வாகி பொங்கல் கொண்டாட்டம்
/
3 டன் செங்கரும்பில் காளை, மாட்டு வண்டி பா.ஜ., நிர்வாகி பொங்கல் கொண்டாட்டம்
3 டன் செங்கரும்பில் காளை, மாட்டு வண்டி பா.ஜ., நிர்வாகி பொங்கல் கொண்டாட்டம்
3 டன் செங்கரும்பில் காளை, மாட்டு வண்டி பா.ஜ., நிர்வாகி பொங்கல் கொண்டாட்டம்
UPDATED : ஜன 16, 2025 06:47 AM
ADDED : ஜன 16, 2025 01:02 AM

காஞ்சிபுரம: காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர், குண்டுகுளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., சட்டசபை தொகுதி ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட துணை தலைவராகவும் உள்ளார்.
விவசாயியான இவர், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு, டன் கணக்கிலான கரும்பினால் வடிவமைக்கப்பட்ட பொங்கல் பானை, காளை, பிரதமர் மோடி உருவம், கரும்பு வீடு என, தன் வீட்டில் பொங்கல் விழாவை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்.
அதன்படி, நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம், கீழ்கதிர்பூரில் உள்ள தன் வீட்டில், மூன்று டன் எடையுள்ள செங்கரும்புகளால், விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் இரு காளை மாடுகள் மற்றும் மாட்டு வண்டிகளை வடிவமைத்து, குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
இதுகுறித்து, விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையிலும்,விவசாயிகளின் நண்பனான காளை, மாட்டு வண்டியின் சிறப்பைபறைசாற்றும் வகையிலும், மூன்று டன் எடையுள்ள செங்கரும்புகளால், காளை மாடு மற்றும்மாட்டு வண்டியை வடிவமைத்தேன். தற்போது, அழிந்து வரும் விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விவசாயம் சார்ந்தவற்றை செங்கரும்புகளால் வடிவமைத்து, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறேன்.
இவ்வாறு அவர்கூறினார்.

