/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் சிக்கினர்
/
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் சிக்கினர்
ADDED : மார் 22, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, விற்பனை செய்வதற்காக 1,300 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, காஞ்சிபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த சிகாமணி, 30; ஒடை தெருவைச் சேர்ந்த வசந்த், 28, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, ஓரிக்கை அருகே, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக, பிரவீன்குமார் என்கிற அப்பு, 27, என்பவரை காஞ்சி தாலுகா போலீசார் கைது செய்தனர்.