/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
30 சதவீத வாக்காளர்கள் விபரம் பதிவேற்றும் பணி நிறைவு 59,000 பேருக்கு சென்றடையாத கணக்கெடுப்பு படிவம்
/
30 சதவீத வாக்காளர்கள் விபரம் பதிவேற்றும் பணி நிறைவு 59,000 பேருக்கு சென்றடையாத கணக்கெடுப்பு படிவம்
30 சதவீத வாக்காளர்கள் விபரம் பதிவேற்றும் பணி நிறைவு 59,000 பேருக்கு சென்றடையாத கணக்கெடுப்பு படிவம்
30 சதவீத வாக்காளர்கள் விபரம் பதிவேற்றும் பணி நிறைவு 59,000 பேருக்கு சென்றடையாத கணக்கெடுப்பு படிவம்
ADDED : நவ 23, 2025 03:07 AM

காஞ்சிபுரம்: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில், பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவங்களில், 30 சதவீத படிவங்களின் விபரங்களை, தேர்தல் கமிஷன் மொபைல் ஆப்பில் பதிவேற்றம் பணி முடிந்திருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவையடுத்து, தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது.
வாக்காளர் திருத்தப் பணிக்காக வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று, கடந்த 4ம் தேதி முதல் வழங்கி வருகின்றனர்.
இப்பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,401 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளில் கணக்கெடுப்பு படிவம் வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெற்று வருகின்றனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களை கண்காணிக்க 145 மேற்பார்வையாளர்களும், 145 கூடுதல் மேற்பார்வையாளர்களும் மற்றும் மண்டல வாரியாக துணை கலெக்டர் நிலையில், 10 கண்காணிப்பு அலுவலர்களும், இவர்களை கண்காணிக்க நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள், 11 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 14.22 லட்சம் வாக்காளர்களில், இரு நாட்கள் முன் வரை 65,000 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் செல்லவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரிய முகவரியில் வாக்காளர்கள் இல்லாததால், படிவம் வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றைய கணக்கெடுப்பில், 59,000 பேருக்கு, இன்னமும் கணக்கெடுப்பு படிவம் செல்லவில்லை.
மொத்த வாக்காளர்களான, 14.22 லட்சம் பேரில், 13.63 லட்சம் பேருக்கு, கணக்கெடுப்பு படிவம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர். அதில், 30 சதவீத படிவங்களை, மொபைல் ஆப்பில், பதிவேற்றம் செய்துள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பு படிவம் வழங்க முடியாமல் உள்ள 59,000 வாக்காளர்களை, அரசியல் கட்சி நிர்வாகிகள் உதவியோடு, படிவத்தை வழங்க, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி உள்ளார்.

