/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் 31 வகை பறவைகள் வலசை
/
வேடந்தாங்கல் சரணாலயத்தில் 31 வகை பறவைகள் வலசை
ADDED : ஜன 24, 2024 10:43 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.
தற்போது, பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.
தற்போது, கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைகுத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளிமூக்கு வாத்து உள்ளிட்ட 31 வகையான பறவைகள் வந்துள்ளன.
தற்போது, ஏரியில் 30000த்திற்கும் அதிகமான பறவைகள் உள்ளன. வர்ணநாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவை இனங்கள், முட்டையிட்டு அடைகாத்து வருகின்றன.
நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா, கரண்டிவாயன் உள்ளிட்ட பறவை இனங்கள் குஞ்சு பொறித்து உள்ளன.
இப்பறவைகளை காண வருகை தரும் சுற்றுலா பயணியர் மற்றும் கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வருகை அதிகரித்து உள்ளது. நேற்று, மேகாலயா மாநில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் விலங்கியல் துறை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ - மாணவியர், வேடந்தாங்கலுக்கு கல்வி சுற்றுலா வந்தனர்.