/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உள்ளாட்சிகளில் 156 வார்டுகளுக்கு 330 விளையாட்டு உபகரணங்கள்
/
உள்ளாட்சிகளில் 156 வார்டுகளுக்கு 330 விளையாட்டு உபகரணங்கள்
உள்ளாட்சிகளில் 156 வார்டுகளுக்கு 330 விளையாட்டு உபகரணங்கள்
உள்ளாட்சிகளில் 156 வார்டுகளுக்கு 330 விளையாட்டு உபகரணங்கள்
ADDED : டிச 31, 2025 03:46 AM
காஞ்சிபுரம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் 156 வார்டுகளுக்கு, 330 விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களுக்குட்பட்ட, 274 கிராம பஞ்சாயத்துகளுக்கும் 330 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 156 வார்டுகளில் 330 விளையாட்டு உபகரணங்களை கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
விழாவில் காஞ்சிபுரம் தி.மு.க., - - எம்.பி., செல்வம், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி, குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

