/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் அருகே 35 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
/
வாலாஜாபாத் அருகே 35 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
வாலாஜாபாத் அருகே 35 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
வாலாஜாபாத் அருகே 35 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
ADDED : டிச 09, 2024 01:40 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் அருகே ஆட்டுபட்டியில் மர்மமான முறையில் 35 செம்மறி ஆடுகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 70; கால்நடை விவசாயி. இவர், செம்மறி ஆடுகள் வளர்ப்பு மூலம் குடும்பத்தை காப்பாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்.
தினமும் மேய்ச்சல் முடிந்தவுடன், ஆடுகளை தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, வழக்கம்போல் தன்னுடைய 80 செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, அதன் அருகே தூங்கியுள்ளார்.
நள்ளிரவு பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக மாசிலாமணி வீட்டிற்கு வந்துளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது, பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளில், 35 ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு, ஆடுகள் இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, அய்யம்பேட்டை கால்நடை மருந்தக மருத்துவர்கள், இறந்த ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
ஆய்வு கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவுகள் வந்த பின் தான், ஆடுகள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 35 செம்மறி ஆடுகள் இறந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.