/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 381 பணிகள்...ரத்து : மறு டெண்டர் விடுவதற்கு அதிகாரிகள் திட்டம்
/
15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 381 பணிகள்...ரத்து : மறு டெண்டர் விடுவதற்கு அதிகாரிகள் திட்டம்
15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 381 பணிகள்...ரத்து : மறு டெண்டர் விடுவதற்கு அதிகாரிகள் திட்டம்
15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 381 பணிகள்...ரத்து : மறு டெண்டர் விடுவதற்கு அதிகாரிகள் திட்டம்
UPDATED : ஏப் 16, 2025 02:04 AM
ADDED : ஏப் 15, 2025 08:31 PM
மறு டெண்டர் விடுவதற்கு அதிகாரிகள் திட்டம்காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 15வது நிதிக்குழு மானியத்தில், 381 பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை செய்ய மறு டெண்டர் விடுவதற்கு பரிந்துரை செய்ய ஊரக வளர்ச்சி துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 15வது நிதிக்குழு மானியத்தில், 381 பணிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை செய்ய மறு டெண்டர் விடுவதற்கு பரிந்துரை செய்ய ஊரக வளர்ச்சி துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுவில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியக்குழுக்கள், 274 கிராம ஊராட்சிகள் அடங்கிய, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன.
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய நிதிக்குழு மானியம் வழங்குகிறது.
இந்த நிதியை, இரு தவனைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கும். இதில், 60 சதவீதம் வரையறைக்கப்பட்ட பணிகள், 40 சதவீதம் வரையறுக்கப்படாத பணிகள் என, 100 சதவீதம் பணிகளை ஊரக வளர்ச்சி துறையினர் செய்து வருகின்றனர்.
குடிநீர், சுகாதாரம் ஆகிய வரையறுக்கபட்ட பணிகள் செய்வதற்கும், அரசு கட்டடம், சிமென்ட் சாலை ஆகிய வரையறுக்கப்படாத பணிகள் என, இரு விதங்களாக நிதி பிரித்தளித்து செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 2021-22ம் நிதி ஆண்டு முதல் 2023-24ம் நிதி ஆண்டு வரையில் மூன்று நிதி ஆண்டுகளில் கணிசமான நிதியை ஒதுக்கீடு செய்து, வளர்ச்சி பணிகளை செய்து வருகின்றனர்.
இதில், ஒரு சில குறிப்பிட்ட பணிகளுக்கு, ஊராட்சிகளில் இட வசதி, உள்ளூர் கிராம மக்கள் தகராறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஆண்டு தோறும் கணிசமான பணிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இது போன்ற பணிகளுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றி விட முடியாமல், ஒதுக்கீடு செய்த பணிகளை நிறைவேற்ற முடியாமல் ஊரக வளர்ச்சி துறையினர் பரிதவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழகத்தில், 4,292 வளர்ச்சி பணிகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த மூன்று நிதி ஆண்டுகளிலும், 111 வளர்ச்சி பணிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில், 151 பணிகள், திருவள்ளூர் மாவட்டத்தில், 119 பணிகள் பூர்த்தி செய்யாமல் இருப்பதாக ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிகள் முடிக்க முடியாததை தவிர்க்க, அனைத்து விதமான பணிகளையும் ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு பணியை தேர்வு செய்த கொடுக்க வேண்டும் என, ஊரக வளர்சி துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
15வது நிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்த பணிகளில், முடிக்க முடியாத சில பணிகளை கணக்கெடுத்துள்ளோம்.
இந்த பணிகளை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய பணிகளை தேர்வு செய்ய அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.
அந்த பணிகளுக்கு மறு டெண்டர் விட்டு புதிய பணிகளை நிறைவு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.