/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
40 வார்டுகளில் சாலை அமைக்க ரூ.4 கோடி
/
40 வார்டுகளில் சாலை அமைக்க ரூ.4 கோடி
ADDED : பிப் 15, 2024 01:50 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு தெருக்களில் உள்ள சாலைகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. ஏராளமான சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றன.
மாநகராட்சி சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் தொடர்ந்து கோரிக்கை எழுந்த நிலையில், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு தெருக்களில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளன.
ஒலிமுகமதுபேட்டை, ஏகாம்பரபுரம் தெரு, எண்ணெய்க்கார தெரு, லிங்கப்பன் பாளையம் தெரு, சி.எஸ்.எம்.,தோப்பு தெரு, தும்பவனம் தெரு, தாயார்குளம் தெரு என, 2.5 கோடியில், 32 வார்டுகளில் உள்ள சாலைகளில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான நிதியை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில நிதிக் குழு நிதியின் கீழ், வார்டுகளில் உள்ள அம்பாள் நகர், வேதாச்சலம் நகர், திருவீதிப்பள்ளம் தெரு உள்ளிட்ட எட்டு வார்டுகளின்கீழ் உள்ள சாலைகள், 1.7 கோடி ரூபாயில் புதிதாக அமைக்கப்பட உள்ளன.

