/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள 4 கடை, வீடு மீட்பு

ADDED : ஜூலை 25, 2025 01:26 AM

காஞ்சிபுரம்,:ஆக்கிரமிப்பில் இருந்த, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு கடைகள், 10 போஷன் உள்ள ஒரு வீட்டை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 1,176 சதுர அடி இடம் உலகளந்தார் மாட வீதியில் உள்ளது. இந்த இடத்தை 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளரிடம் சிக்கியுள்ளது. அந்த இடத்தில், தரைதளம் மற்றும் மூன்று மாடியுடன், நான்கு கடைகள் மற்றும் 10 போஷன் உள்ள ஒரு வீட்டை, உள்வாடகை விடப்பட்டு இருந்தது.
கோவில் இடத்தை காலி செய்யும்படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் அலட்சியம் காட்டி வந்தார்.
ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்யும்படி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமாரதுரை உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன் உள்ளிட்ட குழுவினர், நேற்று, ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்றனர்.
கடை மற்றும் வீடுகளில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. கடை மற்றும் வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, இடத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என, ஹிந்து சமய அறநிலைலயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.