/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : நவ 12, 2024 10:34 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்காக அடையாள அட்டை வழங்கும் முகாமில், 40 மாற்றுத்திறளாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கா அடையாள அட்டை வழங்கும் முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தலைமை தாங்கினார். முகாமில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, 95 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கண், காது, மூக்கு, தொண்டை, எலும்புமுறிவு, மனநலம் மருத்துவர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தினர்.
இதில், 40 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன் வழங்கினார்.
மேலும், அலிம்கோ நிறுவனம் வாயிலாக, 32 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்காக அளவீடு எடுக்கப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.