/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை
/
முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை
முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை
முதல் வகுப்பில் 482 குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கை
ADDED : மார் 06, 2024 01:10 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில், 2024- - 25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, அரசு பள்ளிகளில் தீவிரபடுத்த, கல்வித்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
சுற்றறிக்கை வாயிலாகவும் மாணவர் சேர்க்கைகைய தீவிரபடுத்த தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை பணிகளை, தமிழகம் முழுதும் பள்ளிக் கல்வித் துறை நேற்று முன்தினம் துவங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கலெக்டர் கலைச்செல்வி மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும்தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை துவங்கிய முதல் நாளில், 482 குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்து உள்ளனர்.
இதையடுத்து, துண்டு பிரசுரம், விழிப்புணர்வு பேரணி வாயிலாக கிராமங்களில் மாணவர் சேர்க்கை தீவிரபடுத்தப்பட உள்ளது.

