/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.2.80 கோடி தங்கம் கடத்திய 5 பேர் ஏர்போர்ட்டில் சிக்கினர்
/
ரூ.2.80 கோடி தங்கம் கடத்திய 5 பேர் ஏர்போர்ட்டில் சிக்கினர்
ரூ.2.80 கோடி தங்கம் கடத்திய 5 பேர் ஏர்போர்ட்டில் சிக்கினர்
ரூ.2.80 கோடி தங்கம் கடத்திய 5 பேர் ஏர்போர்ட்டில் சிக்கினர்
ADDED : நவ 03, 2025 11:13 PM
சென்னை:  மலேஷியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 2.80 கோடி ரூபாய் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
மலேஷிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா விமானம், நேற்று முன்தினம் அதிகாலை, சென்னை விமான நிலையம் வந்தது.
இதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மலேஷியாவுக்கு  சுற்றுலா சென்று திரும்பிய, மூன்று பெண்கள், இரு ஆண்கள் என ஐந்து பேரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் உடைமைகளை 'ஸ்கேன்' செய்து பார்த்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை.
அதனால், மூன்று பெண் பயணியரை, தனி அறைக்கு அழைத்து சென்று, பெண் சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது, தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து, 24 கேரட் தரத்தில் ஐந்து தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு 2.80 கோடி ரூபாய்.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், தஞ்சாவூரை சேர்ந்த கடத்தல்காரர்கள், 'கமிஷன்' பணத்திற்காக மலேஷியா சென்றதும், ஆண்களை எளிதில் அதிகாரிகள் பிடித்து விடுவதால், பெண்களை தங்க கடத்தலில் ஈடுபடுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னணியில் உள்ளவர்கள் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

