/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணிமங்கலம் பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு
/
மணிமங்கலம் பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு
ADDED : ஜன 18, 2025 10:32 PM
படப்பை,:தாம்பரம் அருகே உள்ள படப்பை அடுத்த ஆதனுார், கிருஷ்ணாபுரி பகுதியை சேர்ந்தவர் லாசர், 65. ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்.
இவர், தன் மனைவி சுமதி, 61, என்பவரை அழைத்து கொண்டு, ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் இரவு, மண்ணிவாக்கம்- - ஆதனுார் சாலையில் சென்றார்.
ஆதனுார் கபாலி நகர் பகுதியை கடந்த போது, ஸ்கூட்டரை நிறுத்தி மொபைல் போனில் லாசர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஹெல்மெட் அணிந்து, பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சுமதி அணிந்திருந்த, 7 சவரன் செயினை பறித்தனர்.
சுதாரித்துக்கொண்ட சுமதி, செயினை பிடித்த போது, அது இரண்டாக அறுந்தது. இதில், 2 சவரன் சுமதியுடனும், 5 சவரன் செயின் கொள்ளையர்களிடமும் சிக்கியது.
இதையடுத்து, கொள்ளையர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பினர். இந்த சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.