/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளூர் வராஹி கோவிலுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
/
பள்ளூர் வராஹி கோவிலுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பள்ளூர் வராஹி கோவிலுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பள்ளூர் வராஹி கோவிலுக்கு 5 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ADDED : ஏப் 02, 2025 08:55 PM
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, அமாவாசை, வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட பல்வேறு நாட்களில் பெண் பக்தர்கள் அதிகமாக வருகை தருகின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பள்ளூர் வராஹி கோவிலுக்கு வருகை தருகின்றனர். இதுபோன்ற பெண் பக்தர்கள் நலன் கருதி, காஞ்சிபுரத்தில் இருந்து, தக்கோலம், புரிசை உள்ளிட்ட கிராமப்புற பேருந்துகள் நின்று செல்கின்றன.
இதுதவிர, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பள்ளூர் நிறுத்தம் வரையில் ஐந்து சிறப்பு பேருந்துகள் பெண் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் நடை இயக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, பெண் பக்தர்கள் சிரமம் இன்றி, பள்ளூர் வராஹி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர் என, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

