/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்
/
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்
ADDED : டிச 06, 2024 08:03 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையில் பணியாற்றும் துணை தாசில்தார், தாசில்தார் போன்ற அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தார் உட்பட, 5 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாராக பணியாற்றி வந்த சத்யா, நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பிரிவுக்கு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக, ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியரின் உதவியாளராக பணியாற்றிய மோகன்குமார், காஞ்சிபுரம் ரெகுலர் தாசில்தாராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை பொதுமக்கள் நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்த நிலையில், புதிய தாசில்தார் இப்பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நில எடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த பூபாலன், இந்துமதி, வாசுதேவன் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.