/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்னியம்மன், ஆதிபராசக்திக்கு 54வது ஆண்டு ஆடி திருவிழா
/
கன்னியம்மன், ஆதிபராசக்திக்கு 54வது ஆண்டு ஆடி திருவிழா
கன்னியம்மன், ஆதிபராசக்திக்கு 54வது ஆண்டு ஆடி திருவிழா
கன்னியம்மன், ஆதிபராசக்திக்கு 54வது ஆண்டு ஆடி திருவிழா
ADDED : ஆக 13, 2025 01:52 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமராஜர் வீதி கன்னியம்மன் மற்றும் ஆதிபராசக்தி கோவிலில், 54வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று துவங்கியது.
காஞ்சிபுரம் காமராஜர் வீதி, மஞ்சள்நீர் கால்வாய் கரையோரம் அமைந்துள்ள கன்னியம்மன் மற்றும் ஆதிபராசக்தி கோவில், ஹிந்து அறநிலையத் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.
இக்கோவிலில், 54வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளத்தில் இருந்து, ஜலம் திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று, மாலை 5:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், அதனைத் தொடர்ந்து நாளை மாலை 3:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் இரவு புஷ்ப அலங்காரத்தில் கன்னியம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.