/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 577 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 14, 2025 12:08 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில், நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 577 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி செம்மல், மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியை நேற்று துவக்கி வைத்தார்.
இதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு தீர்ப்பாயம் நீதிபதி ஜெயஸ்ரீ, தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் கூடுதல் சார்பு நீதிபதியுமான திருமால், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனாம்பாள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தியாதேவி, நீதித்துறை நடுவர் கருணாகரன், நீதித்துறை நடுவர் - 2 நவீன் துரை பாபு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன், குடும்ப நலம், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம் 577 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, இழப்பீட்டு தொகையாக 7.47 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. இதில், 55 வங்கி வழக்குகளுக்கு 62.6 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.