/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இஷ்டம்போல் வரும் கட்சி புள்ளிகள் வரைமுறையின்றி 60 பேர் பங்கேற்பு
/
இஷ்டம்போல் வரும் கட்சி புள்ளிகள் வரைமுறையின்றி 60 பேர் பங்கேற்பு
இஷ்டம்போல் வரும் கட்சி புள்ளிகள் வரைமுறையின்றி 60 பேர் பங்கேற்பு
இஷ்டம்போல் வரும் கட்சி புள்ளிகள் வரைமுறையின்றி 60 பேர் பங்கேற்பு
ADDED : மார் 19, 2024 08:54 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாக்காளர் பட்டியல் வெளியீடு, ஓட்டுச்சாவடி பிரிப்பது, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பார்வையிடுவது என, தேர்தல் சம்பந்தமான பணிகளுக்கு, அனைத்து கட்சி கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் அடிக்கடி நடத்தப்படுகிறது.
தேர்தல் விதிமுறைகள் பற்றிய அனைத்து கட்சி கூட்டமும் நேற்று முன்தினம், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடந்தது. இவ்வாறு நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, அரசியல் கட்சியினர் வரைமுறையின்றி 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., -- அ.தி.மு.க., -- பா.ஜ., -- காங்., உள்ளிட்ட ஏழு கட்சிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு கட்சி சார்பில், மூன்று பேர் வரை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று வந்தனர்.
ஆனால், சமீப காலமாக, ஒரே கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற கூட்டங்களில் இஷ்டம்போல் பங்கேற்கின்றனர். இவற்றை, தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அனைத்து கட்சி கூட்டம் வரைமுறையோடு, ஒரு சில நிர்வாகிகளுடன் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகி முதல் தொண்டன் வரை பலரும் கலெக்டர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தேர்தல் அதிகாரிகள் இவற்றை முறைபடுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

