/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண் மருத்துவ முகாம் 60 பேர் பங்கேற்பு
/
கண் மருத்துவ முகாம் 60 பேர் பங்கேற்பு
ADDED : அக் 14, 2025 12:47 AM
காஞ்சிபுரம்,
இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை, இன்பினிட்டி ரோட்டரி சங்கம், காஞ்சிபுரம், எஸ்.ஆர்., சர்க்கரை நோய் மையம் மற்றும் குமார் கண் மருத்துவமனை சார்பில், கண் விழித்திரை நோய் கண்டறியும் மருத்துவ பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
மருத்துவ சங்க துணைத் தலைவர் நிஷா ப்ரியா வரவேற்றார். ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மருத்துவ சங்க செயலர் முத்துக்குமரன் கண் விழித்திரை நோயின் அறிகுறிகள் குறித்து விளக்கி பேசினார்.
கண் மருத்துவர் கார்த்திக்குமார், முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் விழித்திரை பரிசோதனைகளை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். முகாமில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.