ADDED : அக் 14, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் விழுதுகள் மற்றும் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தான முகாமில் 24 யூனிட் ரத்தம் தானமாக, பெறப்பட்டது.
காஞ்சிபுரம் விழுதுகள் மற்றும் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
முகாமில், 24 யூனிட் ரத்தம், தானமாக பெறப்பட்டது. முன்னதாக ரத்தம் தானமாக வழங்கியவர்களுக்கு, மருத்துவர் ரம்யா மாலினி தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
அவசர ரத்த தேவைக்காக முகாமில் பெற்ற ரத்த கொடையாளர் ஒருவர், சங்கரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
ரத்த தானம் செய்தவர்களுக்கு மருத்துவமனை பாராட்டு சான்றிதழும், விழுதுகள் சார்பில் மரக்கன்று, புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டன. ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.